For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஜி நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் தர மறுப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Complainant refuses to depose in Justice Ganguly sexual harassment case
டெல்லி: பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் வாக்குமூலம் அளிக்க முன்வராததால், முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான, பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்ய முடியாது என்று டெல்லி காவல்துறை கைவிரித்துவிட்டது.

மேற்கு வங்கத்தின் மனித உரிமை ஆணைய தலைவராக பதவி வகித்தவர் ஏ.கே.கங்குலி, டெல்லி பெண் ஒருவர் இவர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறியதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கங்குலி மீது புகார் பதிவு செய்ய டெல்லி காவல்துறை தயக்கம் காட்டுகிறது. இதற்கு காரணம், புகார் கூறிய பெண், போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. எத்தனையோ முறை போலீசார் கேட்டுக்கொண்டும் அந்த பெண் வாக்குமூலம் அளிக்க முன்வரவில்லை.

இந்த நிலையில் கங்குலி மீது தானாக முன்வந்து வழக்கு தொடுக்க போதிய ஆதாரம் இல்லை என்று டெல்லி போலீசார், உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துவிட்டது. இந்த வழக்கு குறித்து கங்குலி முன்பு அளித்த பேட்டியில், "மேற்கு வங்கத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை நான் எடுத்ததால், என்னை பதவியில் தொடரச் செய்ய அந்த மாநில அரசு விரும்பவில்லை. இதனால்தான் பொய் வழக்கு புனையப்பட்டது" என்று குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

English summary
The Delhi Police has told the Home Ministry that it cannot register a case against former Supreme Court judge Justice AK Ganguly who has been accused of sexual harassment. The police say that the complainant in the case has so far refused to record her statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X