For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதச்சார்பின்மையின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறது காங். - மோடி தாக்கு

By Mathi
Google Oneindia Tamil News

கான்பூர்: மதச்சார்பின்மையின் பெயரால் நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்துகிறது என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டு மக்கள் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது கோபத்தில் இருக்கின்றனர். தேர்தல்களின் போது பொய்யான உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இதைத்தான் கடந்த 60 ஆண்டுகாலமாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செய்து வருகின்றன.

இளவரசர் ராகுல்

ஏழை மக்களின் மிக முக்கிய பிரச்சனை விலைவாசி உயர்வுதான். ஆனால் விலைவாசி உயர்வைப் பற்றி நாட்டு பிரதமர் ஒருபோதும் வாய்திறந்து பேசியதில்லை. சோனியாவும் அவர் மகன் இளவரசரும்கூட இதைப் பற்றியெல்லாம் பேசியதில்லை.

அவர்கள்தான் அப்படி என்றால் அவர்களது கூட்டணிக் கட்சியினரும்கூட அப்படித்தான்.. காங்கிரஸை காப்பாற்றுகிற கூட்டணிக் கட்சியினர் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கின்றனர். முதலாவது சுதந்திரப் போர் கான்பூர், ஜான்சி, மீரட்டில்தான் நிகழ்ந்தது. அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு போனபிறகு நாடு வளர்ச்சியை எதிர்கொள்ளவில்லை.

காங்கிரஸ் மட்டுமின்றி அவர்களின் கூட்டணிக் கட்சிகளின் அரசும் கூட அகற்றப்பட வேண்டியது அவசியம்.

Cong. uses secularism to divide people: Narendra Modi

இப்படி ஒரு பிரதமரா?

உங்களது வாக்கு வங்கி அரசியல் குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.?

குஜராத்துக்கா தேர்தல்?

குஜராத்தில் என்ன நடந்தது? மோடி என்ன செய்துவிட்டார் என்பதுதான் அவர்கள் சொல்வது.. இப்போது தேர்தல் என்ன குஜராத்துக்கா நடைபெறுகிறது? 2012-ம் ஆண்டே குஜராத் தேர்தல் முடிந்துவிட்டது.. மக்களை தேவையில்லாமல் திசை திருப்பாதீர்கள்.

நிலக்கரி ஊழல் டெல்லியில் மட்டுமல்ல... கான்பூரிலும் கூடத்தான் எதிரொலிக்கிறது.. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளிதான் என்கிறார் முன்னாள் அரசு அதிகாரி.. அத்துடன் கோப்புகள் எல்லாம் காணவில்லை என்கிறார்கள்.. கோப்புகள் மட்டுமா காணாமல் போயுள்ளது.. இந்த அரசாங்கத்தையே தேட வேண்டியுள்ளது...மக்களின் வாழ்க்கையும்கூட காணாமல் போய்விட்டது..

விவசாயிகள் ஜோக்கர்களா?

காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் விவசாயிகள் ஜோக்கர்களாகத் தெரிகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இளவரசரோ நாட்டில் ஏழ்மையே இல்லை என்கிறார்.. அவர்கள் தங்க ஸ்பூனுடன் பிறந்தவர்கள்.. நாட்டின் விவசாயிகளோ ஏழ்மையுடனேயே பிறந்தவர்கள்.. ஏழ்மையுடனேயே வாழ்கிறவர்கள்..

ஒரு எம்.பி. சொல்கிறார் ரூ12க்கு சாப்பிட்டுவிடலாம் என்கிறார்.. அது சாத்தியம்தானா? மற்றொரு நபர் ரூ5க்கு சாப்பிட்டுவிடலாம் என்கிறார்.. அவர் இப்போது சிறையில் இருக்கிறார்.. ஒரு அரசாங்கம் என்பது ஏழை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.. பணக்காரர்களுக்கானதாக இருக்கக் கூடாது.

எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்..ஆனால் நாட்டின் அமைச்சர்களோ பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மதச்சார்பின்மை மந்திரம்

காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை என்றால் உடனே மதச்சார்பின்மை என்ற மந்திரத்தை உச்சரித்துவிடும். மதச்சார்பின்மை என்ற பெயரால் நாட்டு மக்களை அக்கட்சி பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் ரத்தம், மரபணுவிலேயே மக்களை பிரித்தாளும் சிந்தனை ஊறிப் போய்கிடக்கிறது. அது ஆங்கிலேயர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்தது.. இந்த நாட்டை கட்சிகளாக, சாதிகளாக கூறுபோட்டு வைத்திருக்கிறது காங்கிரஸ். நாங்கள் நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றே விரும்புகிறோம்.

நாங்கள் வளர்ச்சிக்காக எங்களை ஆதரிக்கக் கோருகிறோம்.. நாட்டை உயர்ந்தநிலைக்கு அழைத்துச் செல்லவே நாங்கள் உங்கள் ஆதரவைக் கோருகிறோம் என்றார் மோடி.

English summary
Gujarat Cheif Minister and BJP's Prime Ministerial Candidate Narendra Modi said, congress uses secularism to divide people in Kanpur rally on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X