வெளிநாடு தப்பிய நீரவ் மோடி.. மத்திய அரசுக்கு நறுக்கென 5 கேள்விகள் முன் வைத்த காங்கிரஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கின் மும்பை கிளையில் ரூ11,360 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த புகாரில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்துக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

Congress 5 questions to Modi govt on Nirav Modi

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசுக்கு 5 கேள்விகளை முன் வைத்துள்ளார்.

  • 1) இதற்கு யார் பொறுப்பு?
  • 2) முறைகேடுகள் பற்றி 2017 ஜூலை 26ல் பிரதமருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. ஏன் பிற அமைச்சகங்கள் அமைதிகாத்தன? டாவோஸ் மாநாட்டில் பிரதமருடன் நீரவ் மோடி பங்கேற்றது எப்படி?
  • 3) நீரவ் மோடிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்புமாறு சிபிஐ பரிந்துரைத்து கடிதம் எழுதியிருந்தது. அப்படி செய்தால் நீரவ் மோடி வெளிநாடு தப்பியிருக்க முடியாது. அதை ஏன் செய்யவில்லை, யார் நீரவ் மோடி தப்பிக்க உதவியது?
  • 4) அனைத்து சிஸ்டம்களையும் தாண்டி எப்படி மோசடி நடந்தது? ஒரு ஆடிட்டர் கூடவா இதை கவனிக்கவில்லை? அப்படியானால் மோசடிக்கு உடந்தையாக பெரிய மனிதர் இருந்திருக்க வேண்டும். யார் அவர்?
  • 5) ரிஸ்க் மேலாண்மை சிஸ்டம் மற்றும் மோசடி கண்டுபிடிப்பு விஷயங்கள் தோற்றது ஏன்?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress spokesperson Randeep Surjewala has posed five questions to the central government. One, who is responsible? Two, Prime Minister Narendra Modi was informed about the irregularities on July 26, 2017. Prime Minister's Office had acknowledged it. Why were all the other ministries silent?

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற