For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச நிலவரப்படி பெட்ரோல் ரூ19.40; டீசல் ரூ15.71-க்கு விற்பனை செய்யுங்க... மோடிக்கு காங். அட்வைஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் லிட்டர் பெட்ரோல் ரூ19.40; டீசல் ரூ15.71-க்குதான் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 32 காசு, டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைத்துள்ளன.

அதன் பின்னர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது. மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Congress on petrol, diesel prices

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா கூறுகையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.19.40 ஆக இருக்க வேண்டும். ஆனால் ரூ.59.03க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.15.71-க்கு விற்க வேண்டும். ஆனால் ரூ.44.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜக ஆட்சியில் கச்சா எண்ணெய்யின் விலை 72.21% குறைந்துள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலையை சில பைசாக்களை குறைத்துவிட்டு கலால் வரியை 8-வது முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு என்றார்.

English summary
Congress Chief Spokesperson Randeep Surjewala said that the govt. going by the price it is paying for international crude oil, should be selling petrol at Rs. 19.40 per litre instead of Rs. 59.03 per litre and diesel at Rs. 15.71 per liter instead of Rs. 44.18 per litre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X