மெகுல் சோக்ஸி வழக்கறிஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் மாற்றமில்லை... காங். திட்டவட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : கர்நாடகாவில் மடிகேரி தொகுதி வேட்பாளராக வங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் சந்திரமௌலி அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் எச்எஸ் சந்திரமௌலி மடிகேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திரமௌலி கர்நாடக அரசின் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இதேபோன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞராகவும் உள்ளார்.

Congress rejects the news that Madikeri candidate HS Chandramoulis seat withheld

சந்திரமௌலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித்மால்வியா, மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் என்ற சிறப்பை பெற்றவர் சந்திரமௌலி என்று குறிப்பிட்டுள்ளார். சித்தராமையாவின் சட்ட ஆலோசகரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பிரிஜேஷ் காலப்பாவிற்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அமித் மால்வியா கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மடிகேரி தொகுதி வேட்பாளராக சந்திரமௌலி அறிவிக்கப்பட்டதை மாற்றக் கூடும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தத் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் சந்திரமௌலி மெகுல் சோக்ஸியுடன் தனிப்பட்டமுறையில் எந்த தொடர்பும் இல்லாதவர்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் தொழிலதிபர் நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸியின் வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்திரமௌலியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார் மெகுலின் வழக்கறிஞர் என்ற முறையில் அவருக்காக வாதாடுவதாக அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காலப்பா எனது நல்ல நண்பர், தேர்தலில் போட்டியிட அவர் எந்த விருப்பமும் தெரிவிக்கவில்லை. எனினும் அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று சந்திரமௌலி தெரிவித்திருந்தார். ஆனால் காலப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் வேறு மாதிரியான கருத்தை பதிவிட்டுள்ளார். தனக்கு கட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை என்பதை சூசகமாக அவர் பதிவிட்டுள்ளார். "நான் மெகுல் சோக்ஸியை சார்ந்திருக்கவில்லை, கட்சியின் அங்கீகாரமும் கிடைக்கவில்லை" என்று காலப்பா பதிவிட்டுள்ளார்.

கடந்த 2 சட்டசபை தேர்தலிலும் மடிகேரி பாஜகவின் பலம் வாய்ந்த தொகுதியாக இருக்கிறது. சந்திரமௌலி கடந்த தேர்தலில் எம்எல்சி பதவியை இழந்த போதிலும் இந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் முன்னாள் எம்.பி ஜெயபிரகாஷ் ஹெக்டே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதால் அவருக்கு எம்எல்சி சீட் மறுக்கப்பட்டதாகவும் காலப்பா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளரை பாஜக விமர்சித்தது போல பாஜக வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா ஊழல்வாதியான ஜனார்த்தன ரெட்டியின் மூத்த சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஜனார்த்தன ரெட்டிக்கு பெயில் கிடைப்பதற்காக நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்தவர் சோமசேகர ரெட்டி என்றும் ரன்தீப் சர்ஜ்வாலா குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Congress Party denied that it had put the candidature of HS Chandramouli, lawyer of Mehul Choksi, on hold, following media reports that said the ruling party in Karnataka had withheld the ticket to the Madikeri seat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற