For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது அதுல்ல.. தமிழகத்தைப் போலவே செம பலத்துடன் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கல்தான்!

தமிழகத்தில் திமுக வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் அமர்ந்துள்ளது போல குஜராத்தில் குடைச்சல் கொடுக்க வலுவான எதிர்கட்சியாக ஜெயித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 80 இடங்களை பிடித்துள்ளது. தமிழகம் போலவே வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் நுழைந்துள்ளது காங்கிரஸ் கட்சி.

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமையவுள்ள வேளையிலும், காங்கிரஸ் கட்சி சட்டசபையில் தன் வலுவை அதிகரித்துள்ளது.

Congress strong opposition party in Gujarat assembly

குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி களத்தில் இல்லை என்பதால் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதன் காரணமாகவே, குஜராத்தைப் பொறுத்தவரையில் கடந்த 22 ஆண்டுகளாக உள்ள ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பிரச்சாரத்தை பிரதமர் மோடியே தலைமையேற்று நடத்தினார்.

கடந்த சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த சட்டசபைத் தேர்தலில் 99 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது பாஜக. இது குஜராத்தில் நடைபெற்று வரும் கடந்த 22 ஆண்டு கால ஆட்சிக்கு பின்னடைவாகும்.

அதே நேரத்தில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மாநிலத்தில் வலுவான நிலை கிடைத்துள்ளது. 80 இடங்களை வென்று எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு இது சற்றே ஏமாற்றம்தான்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை எதிர்த்து முடியட்டும் விடியட்டும் என்று நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். அதிமுகவிற்கு எதிராக கூட்டணியையும் அமைத்தார். ஆனால் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனி கூட்டணி அமைத்தது சாதகமாகி விட்டது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் பிரச்சார யுக்தி அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்து விட்டது. 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 89 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது.

சட்டசபையில் கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெறாத திமுக, ஸ்டாலின் முயற்சியால் 89 இடங்களை வென்றது. அதே போல குஜராத் மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து கடுமையாக உழைத்த காங்கிரஸ் கட்சி 80 இடங்களை வென்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.

English summary
BJP 99, Congress 80 is like DMK alliance getting 98 seats and losing to Jaya last time in TamilNadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X