For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சை பேச்சால் மீண்டும் பாபா ராம்தேவ் மீது பாய்ந்தது வழக்கு! மத மோதலை தூண்டியதாக புகார்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன பாபா ராம்தேவ் இப்போது மதமோதலை தூண்டியதான வழக்கில் சிக்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: இஸ்லாம் தீவிரவாத செயல்களை ஊக்கப்படுத்துவதாக பேசிய சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் யோகா குரு பாபா ராம்தேவ்.

Controversials with Yoga Guru Baba Ramdev

யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தீவிர இந்துத்துவா கொள்கைகளை பேசக் கூடியவர்.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இந்து மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் ராம்தேவ் பேசுகையில், இந்துமதம் மட்டுமே நல்லதை செய்கிறது. இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. பெண்களை இஸ்லாமும் கிறிஸ்தவமும் கட்டாய மதமாற்றம் செய்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார்.

ராம்தேவின் இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளை புண்படுத்தி இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் விதமாக பேசியதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Controversials with Yoga Guru Baba Ramdev

மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய ராம்தேவ், பெண்கள் புடவையில் அழகாக இருக்கின்றனர்; பெண்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதனால் மகளிர் ஆணையம், ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

உத்திர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், சல்மான் கான் போதைப்பொருள் உட்கொள்கிறார், அமீர்கான் பற்றி எனக்குத் தெரியாது. ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார். நடிகைகளைப் பற்றி கடவுளுக்குதான் தெரியும் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.

"மதமாற்றத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தீவிரம்"..வாயை விட்டு வழக்கில் சிக்கிய பாபா ராம்தேவ்

கொரோனா காலத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பின்னர் ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து என்ற மருந்துக்கு மத்திய அரசும் தடை விதித்தது. இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தி விமர்சனங்களை எதிர்கொள்பவர் ராம்தேவ். தற்போது மத மோதல்களைத் தூண்டும் வகையிலான பேச்சுக்காக வழக்கில் சிக்கி இருக்கிறார்.

English summary
Rajasthan Police had filed FIR against Yoga guru Baba Ramdev for his provocative remarks against Muslims and Christians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X