For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பதவியில் இருந்து பிரகாஷ் காரத் அதிரடி நீக்கம்?

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலர் பிரகாஷ்காரத் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பிரகாஷ்காரத் இருந்து வருகிறார். அவர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகிறது.

CPM may force Prakash Karat to quit post

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அசைக்க முடியாத ஆளும் கட்சியாக இருந்தது. தற்போது அந்த கட்சி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசிடம் தோற்று எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் பல தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பறி கொடுத்தது. இந்த தொடர் தோல்வி பிரகாஷ்காரத் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி தலைமையிலான ஒரு குழுவினர் பிரகாஷ்காரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பிரகாஷ்காரத் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரகாஷ்காரத்தை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க சீதாராம் எச்சூரி ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் மார்ச்சிஸ்ட் பொதுச்செயலாளர் பதவியை காரத் இழக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
The CPM’s highest decision-making body is keen to adopt the dissenting note moved by senior party leader Sitaram Yechury where the failure of the Karat leadership in “implementing’’ the party’s political tactical line properly has been held responsible for the party’s total rout at the national centrestage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X