Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்தரங்கம்".. டீச்சருடன் அட்டகாசம்.. வீடியோ லீக்.. ஹெட்மாஸ்டரை ஒரே நாளில் "நடுங்க" வைத்த மாணவர்கள்

பள்ளி தலைமை ஆசிரியரின் வீடியோவை எடுத்து மாணவர்களே வெளியிட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

திருமலை: பள்ளியில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்துள்ளார். இதை ஒரு மாணவன் ரகசியமாக வீடியோ எடுத்து வைரலாக்கினான். இதையறிந்த தலைமை ஆசிரியர், அந்த மாணவனை தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..

ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறல்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 உருட்டுக்கட்டை

உருட்டுக்கட்டை

கர்நாடகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பும், ஒரு தலைமை ஆசிரியரை, அந்த பள்ளியின் மாணவிகளே, "உருட்டுக்கட்டை" பாடம் நடத்தியிருக்கிறார்கள்.. நடுராத்திரி தண்ணி அடித்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த ஹாஸ்டல் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த நிலையில், கொந்தளித்து விட்டார்கள் பள்ளி மாணவிகள்.. நீண்ட காலமாகவே, இரவு நேரங்களில், தினமும் ஒரு மாணவியை, தன்னுடைய அறைக்கு அழைத்து, ஆபாச வீடியோவை காட்டி, பாலியல் அட்டகாசத்தில் நடந்து கொண்டு வந்த அந்த தலைமை ஆசிரியரை, கயிறுகளால் கட்டிவைத்து, குச்சிகள், தடிகளை கொண்டு வந்து, பள்ளி மாணவிகளே அடித்து தாக்கி உள்ளனர்.

 டீச்சர் லீலை

டீச்சர் லீலை

ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்து, அது வீடியோவாகவே வெளிவந்துள்ளது.. கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்... இங்கு தலைமை ஆசிரியராக அதேபகுதியை சேர்ந்த ஆனந்த்பிரசாத் என்பவர் உள்ளார்.. அவருக்கு 48 வயதாகிறது.. இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் வேலை பார்த்து வருகிறது.. இந்த டீச்சருக்கு கல்யாணமாகிவிட்டது.. ஆனந்த்பிரசாத்திற்கும் கல்யாணமாகிவிட்டது.

 லீலை அட்டகாசம்

லீலை அட்டகாசம்

இந்த பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர்தான்.. அதனால், இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.. ஒருகட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் வந்துவிட்டது.. ஸ்கூல் முடிந்ததுமே, அந்த டீச்சரை தன்னுடைய ரூமுக்கு அழைத்து சென்றுவிடுவாராம் ஆனந்த்பிரசாத்.. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. ஸ்கூல் என்றுகூட பாராமல், இருவரும் ஜாலியாக இருந்துள்ளதை, மாணவர்கள் பலமுறை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்... முதலில் சில மாணவர்களுக்குதான் தெரிந்துள்ளது.. நாளடைவில் மொத்த பிள்ளைகளுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டதே தவிர, சம்பந்தப்பட்ட ஜோடிக்கு மட்டும் இது தெரியவில்லை.

 உல்லாசம்

உல்லாசம்

இந்நிலையில் சம்பவத்தன்று சாயங்காலம் வழக்கம்போல், ஸ்கூல் முடிந்ததும், தன்னுடைய ரூமுக்கு டீச்சரை அழைத்து சென்ற, தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார்... இதனை ஒரு மாணவன் ஒளிந்திருந்து செல்போனில் வீடியோவும் எடுத்துவிட்டான்.. மாணவன் வீடியோ எடுப்பதை, தலைமை ஆசிரியரும், டீச்சரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்... தங்களது அந்தரங்கத்தை வீடியோ எடுத்த மாணவனை கூப்பிட்டு, ஆனந்த பிரசாத், பிரம்பால் அடித்து தாக்கி உள்ளார்.. மாணவனின் செல்போனை பிடுங்கி அதில் இருந்த வீடியோவையும் டெலிட் செய்துள்ளார்.. அந்த மாணவனை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.

டெலிட்

டெலிட்

ஆனால் அந்த மாணவனோ, ஆனந்த பிரசாத் பார்ப்பதற்கு முன்பேயே, அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டான்.. இந்த வீடியோதான் நேற்று ஒரேநாளில் வைரலானது... டெலிட் செய்வதற்கு முன்கூட்டியே அந்த மாணவன் நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட விஷயம், ஆனந்த பிரசாத்துக்கு தெரியவந்ததை அடுத்து, அப்படியே இடிந்துபோய் விட்டார்.. இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவனை அழைத்து மறுநாளும் மிரட்டியுள்ளார். அப்போதுதான், மாணவரின் பெற்றோர் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.. மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் விஷயம் பரவியது.

அந்தரங்கங்கள்

அந்தரங்கங்கள்

கொந்தளிப்புடன் திரண்டு வந்த பெற்றோர், இதுதொடர்பாக சிலகுலபொடி போலீசில் புகார் செய்தனர்... அதன்பேரில் போலீசார் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து விசாரணையை உடனடியாக தொடங்கினர்.. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத்தை அன்றைய தினமே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.. தலைமை ஆசிரியரின் செயல் குறித்து கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.. ஆனந்த்பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர். டீச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியர்கள், எவ்வளவு பெரிய தவறையே செய்தாலும், "சஸ்பெண்ட்" ஒன்றுதான் இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையா????

 ஆடியோ + வீடியோ

ஆடியோ + வீடியோ

இந்த வீடியோ வெளியான அதேநேரம்தான், இங்கே புதுக்கோட்டை பேராசிரியரின் ஆடியோவும் வெளியாகி உள்ளது.. பிபிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, அந்த கல்லூரியில் பேராசிரியர் பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.. மாணவியின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, அடிக்கடி அவருக்கு தொடர்பு கொண்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் ஆபாச பேச்சும் பேராசிரியரிடம் அதிகரித்துள்ளதுடன், தவறான உறவுக்கும் மாணவியை அழைத்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடைய சக தோழியிடம் செல்போனில் பேசிய ஆடியோவும் இணையத்தில் வைரலானது.. ஒருபக்கம் போலீசாரும், மற்றொருபக்கம், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.. தலைமைஆசிரியர் விவகாரத்தில், மாணவர்கள் தரப்பில் புகார்கள் தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+