For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளம் குற்றவாளிகளின் வயது குறைப்பு... டெல்லி மருத்துவ மாணவியின் பெற்றோர் பாராட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக இளஞ்சிறார் வயது வரம்பை 18-லிருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளதை டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் பாராட்டியுள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் 6வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நேற்று பார்வையிட்டார் மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி.

Dec 16 rape victim's parents welcome Maneka's statement on juveniles

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேனகா காந்தி, ‘நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று இளஞ்சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது' என்றார்.

மேலும், தற்போது 50 சதவீதம் பாலியல் வன்கொடுமைகளில் 16 வயது உள்ளவர்கள் தான் அதிகளவில் ஈடுபடிவதாகவும், 16 வயதாகக் குறைப்பு சிறுவர்களாக இருப்பதால் தண்டனையில் இருந்து எளிதாக தப்பிவிடலாம், என்று தெரிந்தே இவர்கள் தவறான வழிகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக சிறார் நீதி சட்டத்தின்படி சிறுவர்களுக்கான வயது 18 என்பதை 16 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார்.

வரவேற்பு...

மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் இந்த அறிவிப்பை, கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவமாணவியின் பெற்றோர் வரவேற்றுள்ளனர்.

தண்டனை....

இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் தந்தை கூறுகையில், ‘மேனகாகாந்தியின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பாராட்டவும் செய்கிறோம். பலாத்காரம் மற்றும் கொலை போன்ற படுபாதக குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை, பெரியவர்களாக பாவித்து தண்டனை வழங்க வேண்டும்.

குற்றவாளிகள்...

ஏனெனில், வயதைக் காரணம் காட்டி குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து தப்பிக்கக் கூடாது. குற்றவாளிகள் குற்றவாளிகள் தான்' எனத் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் குறையும்...

இதேபோல், பலியான மருத்துவ மாணவியின் தாயாரும் மேனகா காந்தியின் பேச்சை பாராட்டியுள்ளார். மேனகா கூறியது போல், சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவமாணவி வழக்கு...

கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The parents of the Dec 16, 2012 Delhi gang rape victim Monday welcomed the statement of Women and Child Development Minister Maneka Gandhi that juveniles, accused of serious crimes like rape, be treated on par with adults.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X