தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்.. தினகரன்தான் "ஏ1".. மீள்வது ரொம்பவே கஷ்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனை முதல் குற்றவாளியாகவும், சுகேஷ் சந்திராவை இரண்டாவது குற்றவாளியாகவும் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் எப்படியாயினும் இரட்டை இலை சின்னத்தை பெற்று சித்தியிடம் சேர்ப்பதற்காக டெல்லி தொழிபதிபர் சுகேஷ் சந்திராவிடம் ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது.

Delhi police added TTV Dinakaran as no.1 accused in FIR

அதன்பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்த டெல்லி போலீஸார், டிடிவி தினகரனை முதல் குற்றவாளியாகவும், சுகேஷ் சந்திராவை இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது தலையெழுத்து கிட்டத்தட்ட சீல் வைக்கப்பட்டு விட்டதாக கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bribe to Election commission case: Delhi police has registered TTV Dinakaran as first accused and sukesh as second.
Please Wait while comments are loading...