For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘ஒத்த ரூபா’ சலுகையை உடனே நிறுத்துப்பா முதல்ல.. ஸ்பைஸ் ஜெட்டுக்கு டிஜிசிஏ உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நேற்று அறிவித்த 1 ரூபாய் அடிப்படை கட்டணத்திலான புதிய விமானக் கட்டண சலுகையை உடனடியாக நிறுத்த சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

விமான நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியில் தங்களுடைய வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் நேற்று ஸ்பைஸ் ஜெட் 1 ரூ அடிப்படை கட்டணத்தில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது.

அதன்படி, சட்ட வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இன்றி விமானக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது. இதன்படி நேற்று முதல் நாளை வரை, அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இத்திட்டத்தின் படி சலுகை விலையில் விமான டிக்கெட்டுக்களை பதிவு செய்து கொள்ளலாம் என ஸ்பைஸ் ஜெட் அறிவித்தது.

வாபஸ் பெறுங்கள்....

வாபஸ் பெறுங்கள்....

மேலும், இந்தத் திட்டம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் பயணங்களுக்கான விற்பனை சலுகை என அது தெரிவித்தது. ஸ்பைஸ் ஜெட்டின் இந்த அதிரடி ஆஃபரைக் கேள்விப்பட்ட சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் உடனடியாக இத்திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக....

பயணிகளின் வசதிக்காக....

இந்தப் புதிய திட்டத்தின் படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இணையதளத்தில் மூலமாக பயண முகவர்கள் மற்றும் பயண இணையதளங்கள் மூலமாகவும் பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம் என நேற்று அறிவிக்கப் பட்டது.

இந்தியச் சந்தையில் முன்னணியில் நிற்க...

இந்தியச் சந்தையில் முன்னணியில் நிற்க...

இதுபோன்ற தள்ளுபடிக் கட்டணங்களைக் கொடுத்து பயணிகளின் தேவைகளைத் தூண்டுவதன் மூலம் இந்திய சந்தையில் தாங்கள் முன்னணியில் நிற்பதாகவும், முன்னதாகத் திட்டமிடும் பயணிகளுக்குத் தாங்கள் ஊக்கமளிப்பதாகவும் திட்டத்தை அறிமுகப் படுத்திய பின்னர் ஸ்பைஸ் ஜெட் சிசிஓ கானேஸ்வரன் அவிலி தெரிவித்திருந்தார்.

சந்தோஷமான பயணம்...

சந்தோஷமான பயணம்...

மேலும், ரயில் கட்டணத்தைவிடக் குறைவாக இருக்கும் இந்த சலுகைகளைத் துரிதமாக செயல்பட்டு பயன்படுத்திக் கொண்டால் சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் ஒருவர் தனது பயணங்களை அனுபவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.

மக்களின் ஆதரவு கிட்டும்...

மக்களின் ஆதரவு கிட்டும்...

இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சிஓஓவான சஞ்சீவ் கபூர் கூறுகையில், ‘பொருளாதார மந்தநிலைக் காலங்களின்போது எங்களின் இத்தகைய தூண்டுதல் முயற்சிகள் பயண சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தது. புதிய பொருளாதார ஆண்டினையும், கோடைக்காலத் திட்டங்களையும் சிறப்புத் தள்ளுபடிகளுடன் தொடங்குவதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த தள்ளுபடி விற்பனைகளில் நல்ல ஆதரவு கிடைத்ததுபோல் இந்த முறையும் மக்களின் ஆதரவு கிட்டும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

135ம் விதிக்குட்பட்டது...

135ம் விதிக்குட்பட்டது...

பலத்த எதிர்பார்ப்புகளுடன் நேற்று அறிமுகப் படுத்தப் பட்ட இந்தக் கட்டணச் சலுகை திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்த ஆஃபர் முறைகேடு சம்பந்தமான 135 விதிக்குட்பட்டதாக உள்ளதாக அது விளக்கமளித்துள்ளது.

சலுகைத் திட்டமல்ல...

சலுகைத் திட்டமல்ல...

பொதுவாக விமானப் பயணத்தின் போது ஒன்று அல்லது இரண்டு இருக்கைகளை மட்டும் இதுபோன்ற சலுகைக்கட்டணத்தில் தரலாம். ஆனால், ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ள கட்டணச் சலுகை திட்டம் அத்தகையதல்ல.

லாபத்தை கூட்ட....

லாபத்தை கூட்ட....

இதற்கு முன்னர் ஏர் டெக்கான் நிறுவனமும் இதே போன்ற சலுகைகளை அறிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, கடந்த டிசம்பர் மாதம் ரூ 171 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காண்பித்த ஸ்பைஸ் ஜெட்டும் தற்போது இத்தகைய திட்டத்தை அறிவித்தது.

இதர திட்டங்கள்...

இதர திட்டங்கள்...

இது தவிர மிகக் குறைந்த கட்டணமாக ரூ 799 மற்றும் ரூ1499க்கு விமானக் கட்டணம் உள்ளது போன்ற திட்டங்களையும் ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Terming SpiceJet's offer of rupee one fare across its domestic network as "predatory" and a "malpractice", aviation regulator DGCA came down heavily on the no-frill carrier and asked it to stop such pricing immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X