சசிகலா ஜெ. சமாதியில் ஓங்கி அடித்தார்.. ஈபிஎஸ் யார் கையில் அடித்து சத்தியம் செய்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கட்சிக்குக்கோ, ஆட்சிக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்த சூழ்நிலையிலும் துரோகம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் என்று சிறையில் உள்ள சசிகலா தன்னை காண வந்த டிடிவி தினகரனிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா. எந்த சூழ்நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரனுடன் தொடர்பு கிடையாது என்று அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தார்.

அதே நாளில் டிடிவி தினகரனும் தனது குடும்பத்தோடு சித்தி சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் பற்றியும், கட்சியில் தனக்கு நேரும் அவமானங்களைப் பற்றியும் எடுத்துக்கூறினாராம்.

துரோகம் செய்ய மாட்டார்

துரோகம் செய்ய மாட்டார்

அப்போது சசிகலா உறுதியாக ஒரு விசயத்தை டிடிவி தினகரனிடம் சொன்னாராம். அதாவது எந்த சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி நமக்கு துரோகம் செய்ய மாட்டார். என் கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் என்று கூறினாராம் சசிகலா.

நெருக்கடி தர வேண்டாம்

நெருக்கடி தர வேண்டாம்

இன்னும் 3 மாதங்கள் பொறுத்திருப்போம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அவர்கள் முடிவெடுக்கட்டும். ஆட்சிக்கு எந்த சூழ்நிலையிலும் நெருக்கடி தரவேண்டாம் என்றும் டிடிவி தினகரனுக்கு அட்வைஸ் செய்தாராம் சசிகலா.

ஆதரவு தரலாம்

ஆதரவு தரலாம்

ஆட்சியை எந்த நெருக்கடியும் இன்றி நடத்தினால்தான் நமக்கும் நல்லது. அதேபோல கட்சியை முன் வைத்து குடும்பத்தினர் மோதிக்கொள்ள வேண்டாம் என்றும் சசிகலா கூறியுள்ளாராம்.

பொதுக்கூட்டம் வேண்டாம்

பொதுக்கூட்டம் வேண்டாம்

ஆதரவாளர்களை வைத்து பொதுக்கூட்டமோ, ஆட்சிக்கு எதிராக பேசுவதோ வேண்டாம் என்றும் கூறினாராம் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி பற்றி சசிகலா நம்பிக்கையோடு கூறியுள்ளதால் தினகரனும் நம்பிக்கையோடு வந்திருக்கிறாராம். இப்போதய சூழ்நிலையில் அரசுக்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

எதுவும் பேசாத எடப்பாடி பழனிச்சாமி

எதுவும் பேசாத எடப்பாடி பழனிச்சாமி

சசிகலா, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் பேசினாலும் இதுவரைக்கும் சசிகலா, தினகரனுக்கு எதிராக இதுவரை எந்த கருத்தையும் கூறியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources say that CM Edappadi Palaniswami has given a promise to Sasikala not to turn against her at any situation.
Please Wait while comments are loading...