For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசல் மீதான கட்டுப்பாடு முழுமையாக தளர்த்தப்படும். இனி விலை 'கிடுகிடு'..சொல்கிறார் மொய்லி

By Mathi
Google Oneindia Tamil News

Diesel prices to be deregulated in six months: Moily
மும்பை: டீசல் விலையை படிப்படியாக உயர்த்துவதன் மூலம் 6 மாத காலத்தில் மானிய குறைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் முழு அளவில் தளர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மொய்லி, டீசல், பெட்ரோல் விலையை ஒரே அடியாக ரூ3 அல்லது 4 என உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. விலை உயர்வு படிப்படியாக உயர்த்தப்படும்.

தற்போதைய நிலவரப்படி டீசல் விற்பனை மூலமான இழப்பை 19 மாதங்களில் ஈடுகட்ட முடியும். இருப்பினும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறையும் போது இந்த காலமானது 6 மாதமாக குறையக் கூடும். டீசல் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சாதகமாகவும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் இருக்குமேயானல் மானிய குறைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடு தளர்வுகளையும் முழு வீச்சில் அரசு மேற்கொள்ளும்.

5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மாதாந்திர விலை மாற்றம் செய்வதில் எந்த ஒரு முட்டுக்கட்டையும் கிடையாது. மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே ஆட்சி அமைக்கும். அதுபற்றி கவலையே வேண்டாம் என்றார்.

English summary
Diesel prices will be deregulated in six months with gradual price increases, Oil Minister M Veerappa Moily said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X