அஅதிமுக.. எஅமுக.. அஎமுக.. புதிய கட்சிக்கு 3 பெயர்களை பரிந்துரை செய்தார் தினகரன் !

Posted By:
Subscribe to Oneindia Tamil
  18ல் ஒருவரை முதல்வராக்க திட்டம் - கனவில் ஆதரவாளர்கள் | Oneindia Tamil

  டெல்லி: அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 பெயர்களை தனது புதிய கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

  கடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தினகரன். இதைத் தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சித்தும் முடியவில்லை.

  Dinakaran recommends 3 names for his new party

  இதனால் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவதற்கும் குக்கர் சின்னம் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தினகரனின் இந்த கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

  இந்நிலையில் தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்திந்திய எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் ஆகிய 3 பெயர்களை தனது புதிய கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.

  ஏற்கனவே தினகரன் தரப்பினர் அண்ணா உருவம் இல்லாமல் கருப்பு-வெள்ளை- சிவப்பு கொடியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபல் சிபல் முன் வைத்த வாதத்தில் புதிய கட்சியை தற்போது பதிவு செய்ய சாத்தியம் இல்லை.

  தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக சின்னமும் பெயரும் கேட்கவில்லை. அனைத்து தேர்தல்களுக்கும் கேட்கிறோம். எனவே மேற்கொண்ட 3 பெயர்களில் ஒரு பெயரை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றார் கபில் சிபல்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran recommends 3 names for his new party in Delhi Highcourt.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற