For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கு... முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரி ராஜஸ்தானில் கைது

சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஜோத்பூர்: கொளத்தூர் நகைக்கடலில் மூன்றரை கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தினேஷ் சவுத்ரி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Dinesh Chowdary arrested in Rajasthan

இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் பாலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். நேற்று அதிகாலை அவர்களை பிடிக்க ராம்பூர்கலாவுக்கு தனிப்படையினர் சென்றபோது அங்கு செங்கல் சூளை அருகே மறைந்திருந்த நாதுராம், மதுரவாயல் காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டியின் துப்பாக்கியை பறித்தார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய பாண்டி உள்ளிட்டோரை நாதுராம் சுட்டார். இதில் பெரிய பாண்டி வீரமரணம் அடைந்தார். மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பெரிய பாண்டியின் உடல் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கு சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அவரது உடல் சென்னையிலிருந்து பெரிய பாண்டியின் சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உள்ள மூவிருந்தாளி எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில்
சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள நாதுராமை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

English summary
Dinesh Chowdary arrested in Rajasthan. Maduravoyal Inspector Periya pandi and his special team had gone to catch Dinesh and Nathuram main accused in Kolathur Jewel robbery case. At that time Nathuram shot Periya pandi yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X