காங்கிரஸ் தொண்டர்களை பேக்-ஐடி உருவாக்கச் சொன்ன குத்து ரம்யா.. வீடியோ வெளியிட்ட பாஜக.. அடடே விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தொண்டர்களை பேக்-ஐடி உருவாக்கச் சொன்ன காங்கிரஸின் குத்து ரம்யா- வீடியோ

  பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கர்நாடகாவில் சமூக வலைதளம்படி பார்த்தால் காங்கிரஸ் கை தற்போது கொஞ்சம் ஓங்கி இருக்கிறது.

  முக்கியமாக ரம்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பொறுப்பாளராக இருப்பதால் திறம்பட செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

  நேற்று பிரதமர் மோடியைப் போதையில் பேசுகிறார் என்று விமர்சனம் செய்து இருந்தார். ரம்யா ஸ்பந்தனாவின் இந்த விமர்சனம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

  என்ன

  பெங்களூரில் மோடி பேசியது குறித்து ரம்யா ஸ்பந்தனா டிவிட்டரில் ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். டாப் என்ற வார்த்தையை அப்படியே 'போட்' என்று குறிப்பிட்டார். இதுதான் முதலில் சர்ச்சை உருவாக்கியது.

  அடுத்த சர்ச்சை

  இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் தொடர்களிடம் ''நீங்கள் எல்லோரும் பேஸ்புக், டிவிட்டில் போலி கணக்கு உருவாக்குங்கள். நிறைய ஐடிகள் உருவாக்குங்கள். அப்போதுதான் பாஜகவை விடச் சமூக வலைத்தளத்தில் நாம் பலமாக இருக்க முடியும்'' என்று பேசியுள்ளார். இவர் கன்னடத்தில் பேசும் காணொளி பாஜக கட்சியால் வெளியிடப்பட்டது.

  நடவடிக்கை

  இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக சமூகவலைத்தள குழுவை சேர்ந்த அமித் மால்வியா ''ரம்யா முதலில் போதை குறித்துப் பேசி ராகுல் காந்தியை பிரபலப்படுத்த நினைத்தார். அது சரிவரவில்லை என்றதும் தற்போது போலி கணக்கு உருவாக்கச் சொல்லி இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  ரம்யா ஸ்பந்தனா விளக்கம்

  இதற்கு ரம்யா விளக்கம் அளித்துள்ளார். அதில் ''முதலில் இது போலியாக திரிக்கப்பட்ட வீடியோ. இரண்டாவது நான் போலி கணக்கு, பல கணக்கு, அதிகாரப்பூர்வ கணக்கு குறித்து பேசிய வீடியோ இது. மூன்றாவது உங்களது சொந்த கருத்தைச் சொல்ல நினைத்தால் இன்னொரு கணக்கு உருவாக்குங்கள், காங்கிரஸ் கட்சி கணக்கில் போடாதீர்கள் என்று கூறினேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Divya spandana becomes viral again on Twitter regarding Fake Ids. The video released in which she asked congress workers to create more than one Id in order overtake BJP in social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற