For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தாச்சு டோல்ஃபி… இது கையடக்க வாசிங் மெசின்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: சலவை செய்ய ‘தோபி'யை தேடிய காலம் போய் வாசிங்மெசினுக்கு மாறினர் இல்லத்தரசிகள். ஆனாலும் அழுக்கு போக தேய்த்துதான் துவைத்து காயவைத்தனர். இப்போது அதுவும் எளிதாகிவிட்டது.

கையடக்க டோல்ஃபி சலவை செய்யும் வேலையை எளிதாக்குகிறதாம். கைக்கு அடக்கமாக சின்ன சோப் சைசில் இருக்கும் இந்த டோல்ஃபியை நாம் நாம் போகும் இடமெங்கும் ஈசியாக எடுத்துச் செல்லாம்.

எங்கேயாவது வெளி ஊருக்கு போனால் அழுக்கு துணிகளை துவைக்க லாண்ட்ரி கடைகளை தேடுவோம். இனி அவ்வாறு தேடவேண்டாம் எளிதாக துவைக்கலாம் என்கின்றனர் இந்த டோல்ஃபி கண்டுபிடிப்பாளர்கள்.

டோல்ஃபி

டோல்ஃபி

இந்த கையடக்க கருவியை சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். டோல்ஃபி எனப்படும் இந்தக் கருவி, சோப் அளவில்தான் இருக்கிறது.

சின்ன சிங்க் போதும்

சின்ன சிங்க் போதும்

அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவியை பயன்படுத்தி துணி துவைக்க, சமையலறை சிங்க் போன்ற ஒரு சிறிய தொட்டி போதுமானது.

ஒலி அதிர்வுகள்

ஒலி அதிர்வுகள்

அதில் நீரை நிரப்பி துணிகளைப் போட்டு, சலவைத் தூளை போட வேண்டும். பிறகு, இந்தக் கருவியை உள்ளே போட்டு விட்டால் நீரில் அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தும்.

அழுக்கு போயே போச்சு

அழுக்கு போயே போச்சு

நீரில் அது குமிழ்களை ஏற்படுத்தி, துணிகளில் இருந்து கரைகளை வெடிக்கச் செய்து வெளியே எடுத்து விடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பளிச்… பளிச்…

பளிச்… பளிச்…

கைகளால் தேய்க்கவோ, நீரில் ஊற வைக்கவோ அவசியமில்லாமல் 30 நிமிடத்தில் துணிகளை டோல்ஃபி கருவி பளிச்சென மாற்றிடும் என்கின்றனர்.

விலை எவ்வளவு?

விலை எவ்வளவு?

இதன் விலை சுமார் 6 ஆயிரம் வரை இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதன் வணிக ரீதியான தயாரிப்பு வருகிற 20ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அடிக்கடி பயணம் செய்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாமதான் காயவைக்கணும்

நாமதான் காயவைக்கணும்

இந்த டோல்ஃபி துவைத்து மட்டும்தான் கொடுக்கும். நாம்தான் பிழிந்து, காயவைத்து பின்னர் அதை மடித்து வைக்கவேண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இல்லத்தரசிகளே.

English summary
A tiny device could be about to revolutionise the way we clean our clothes.Dolfi is no bigger than a bar of soap, yet it transforms any wash basin into a washing machine. Its makers claim that the device washes clothes as well as a standard machine thanks to its ultrasonic technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X