எனக்கு தனிப்பட்ட வெறுப்பெல்லாம் இல்லை.. வாரிசு அரசியல் நோய் குணமாகனும்! அதுவே விருப்பம்: மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: ‛‛இந்தியாவின் வாரிசு அரசியல் ஒரு நோய். இதில் இருந்து கட்சிகள் குணமாக வேண்டும். அரசியலில் எந்தவொரு கட்சி அல்லது தலைவர் மீதும் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்பதே விருப்பம்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபகாலமாக அவர் பங்கேற்கும் அனைத்து மேடைகளிலும் இதுபற்றி பேசி வருகிறார்.

வாரிசு அரசியலால் குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே வளர்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்க பாதிப்பு ஏற்படுத்துவதோடு, அரசியலில் ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இல்லை என குற்றம்சாட்டி வருகிறார்.

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

இந்நிலையில் நேற்று உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பரனுக் கிராமம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சொந்த கிராமமாகும். இந்த கிராமத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் வாரிசு அரசியல் குறித்து மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாயகத்துக்கு எதிரானது

ஜனநாயகத்துக்கு எதிரானது

இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அரசியலில் எந்தவொரு கட்சி அல்லது தலைவர் மீதும் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்பதை விரும்புகிறேன். வாரிசு அரசியலை முன்னெடுக்கும் கட்சியில் அதனை விடுவித்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்.

வாரிசு அரசியல் நோய்

வாரிசு அரசியல் நோய்

வாரிசு அரசியல் என்பது ஒரு நோய். இந்த நோயில் உள்ள கட்சிகள் தங்களை குணப்படுத்தி கொள்ள வேண்டும். நான் வாரிசு அரசியல் பற்றி பேசும்போதெல்லாம் அதனை முன்னெடுக்கும் கட்சியினர் வருத்தமடைகின்றனர். வாரிசு அரசியலை கைவிட்டால் தான் ஜனநாயகம் வலுபெறும். இளைஞர்களும் அரசியலில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற முடியும்.

 கிராமத்தில் பிறந்தவர் உயர் பதவி

கிராமத்தில் பிறந்தவர் உயர் பதவி

வாரிசு முறை என்பது தனிநபரின் வளர்ச்சியை மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கிராமத்தில் பிறந்தவர் கூட நாட்டின் பிரதமர், ஜனாதிபதி ஆகும் நிலை வேண்டும்' என்றார். முன்னதாக உள்ள பத்ரி தேவி கோவிலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் தரிசனம் செய்தனர். மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+