For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணச் செலவு 900% உயர்வு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணச் செலவு கடந்த 6 ஆண்டுகளில் 900 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.ஜி. அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பயணச் செலவுகள் குறித்த விவரங்களைக் கேட்டு மனு அளித்திருந்தார்.

அதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் விவரம்:

2008-ல் ரூ8 லட்சம்

2008-ல் ரூ8 லட்சம்

தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணத்திற்காக கடந்த 2008-09-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் ஒதுக்கப்பட்டது.

2011-ல் ரூ75 லட்சம்

2011-ல் ரூ75 லட்சம்

ஆனால் 2011-12-ஆம் ஆண்டில் ரூ. 75 லட்சமும், 2012-13 ஆம் ஆண்டில் ரூ. 63 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயண செலவு?

உள்நாட்டு பயண செலவு?

உள்நாட்டுப் பயணச் செலவாக 2008-09-ஆம் ஆண்டில் ரூ. 64 லட்சமும், 2012-13-ஆம் ஆண்டில் ரூ. 70 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

23 நாடுகளுக்குப் போன குரோஷி

23 நாடுகளுக்குப் போன குரோஷி

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த குரோஷி கடந்த 2008-12 ஆண்டு வரை அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா உள்ளிட்ட 23 வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English summary
Spending on foreign visits by Election Commission officials grew by nearly 900 per cent from Rs 8.33 lakh in 2008-09 to Rs 74.86 lakh in 2011-12 even as it came down slightly to Rs 62.98 lakh in 2012-13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X