அமைச்சர் பதவி இல்லாட்டி என்ன.. கவலைப்படாதீங்க.. மேலிடம் தந்த குஷி.. முடிவை மாற்றிய பாஜக தலைவர்
கொல்கத்தா: பிரதமர் மோடியின் அமைச்சரவையின் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சௌமித்ரா கான் எம்பி, பதவி கிடைக்காதால் விரக்தி அடைந்து மேற்கு வங்க பாஜக இளைரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் மேலிடம் தந்த நம்பிக்கை வார்த்தையால் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.
2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் ஒரு முறை கூட அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
புதியவர்கள் பதவியேற்புக்கா 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம் 36 புதிய அமைச்சர்கள் உள்பட 43 பேர் பதவியேற்றனர். 7 இணையமைச்சர்கள் கேபிணட் அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர்

விரக்தியில் முடிவு
இந்நிலையில் மேற்கு வங்க பாஜக இளைரணி தலைவர் சௌமித்ரா கான் எம்பி, இந்த பட்டியலில் இளம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் பாஜக இளைரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

சோகத்தில் முடிவு
இது தொடர்பாக பேசிய சௌமித்ரா கான், இப்போதும் ஒன்றும் ஆகிவிடல்லை. நான் அடிமட்ட தொண்டன். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. நான் பாஜகவிலேயே தொடர்ந்து இருப்பேன் என்று சோகத்துடன் கூறினார்.

முடிவை மாற்றினார்
இந்நிலையில் மேற்குவங்க பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் சொன்ன நம்பிக்கை வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த சௌமித்ரா கான் எம்பி, பாஜக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார். தொடர்ந்து கட்சிக்காக பாடுபடுவேன் என்கிறார் உற்சாகமாக..!

பாஜக தலைமை
மேற்கு வங்கத்தில் பாஜக கடந்த ஆறு ஆண்டுகளில் அசுர வளர்ச்ச அடைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முக்கிய தலைவர்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய நிலையில் இருப்பவர்களை தக்க வைக்கக வேண்டும் என்றும் புதிதாக யாரும் கட்சி மாறக்கூடாது என்றும் பாஜக டெல்லி மேலிடம் மேற்கு வங்க பாஜக தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னரே ராஜினாமாக்கள், பதவி விலகல் ஓய்ந்துள்ளது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications