For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பைடர்மேனாக மாறிய பீகார் பெற்றோர்கள்... கட்டட்டத்தில் தொற்றி ஏறி பிள்ளைகளுக்கு பிட்டு தானம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வைஷாலி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்களே விடைத்தாள்களை தூக்கிப் போடும் அவலம் அரங்கேறியுள்ளது. இது இங்கல்ல பீஹார் மாநிலத்தில்.

பரிட்சைக்குப் போகும் மாணவர்களுக்கு திருநீரு இட்டு அனுப்புவார்கள் பெற்றோர்கள். ஆனால் பீஹார் மாநிலம் வைஷாலியில் நீ முன்னாடி போய் தேர்வு எழுது நான் பின்னாடியே வந்து உனக்கு பிட்டு போடுறேன் என்று சொல்லி அனுப்புகின்றனர்.

அதோடு தேர்வு எழுதும் மையத்தின் அறை ஜன்னல்களின் மீது ஏறி பிட் பேப்பரையும், புத்தகங்களையும் வீசியுள்ளனர். இப்படி பெற்றோர்கள் பிட் போடும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகா கேவலம்... பெற்றோர்கள் செய்யும் இந்த அவலச் செயலைப் பாருங்களேன் என்று கருத்திட்டுள்ளனர்.

100 பெற்றோர்கள் கைது

கடந்த 2013ஆம் ஆண்டு பீஹாரில், 10ம் வகுப்பு தேர்வில், ‘பிட்' அடித்த, 1,600 மாணவர்கள், கையும், களவுமாக பிடிபட்டனர். இவர்கள், தேர்வெழுத தடை விதிக்கப்பட்டதோடு ‘பிட்' அடிப்பதற்கு உதவியதாக, மாணவர்களின் பெற்றோர், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பீஹார் மாநிலத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ‘பிட்' அடிப்பதாக, புகார் எழுந்தது. இதையடுத்து, "பிட்' மாணவர்களை பிடிப்பதற்காக, அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

அதிரடிப் படையினர், கடந்த சில நாட்களாக, தேர்வு மையங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், ‘பிட்' அடித்த, 1,600 மாணவர்கள், கையும், களவுமாக சிக்கினர். இவர்கள், தொடர்ந்து தேர்வு எழுத, தடை விதிக்கப்பட்டது.மாணவர்கள், ‘பிட்' அடிக்க உதவியதாக, அவர்களின் பெற்றோர், 100 பேர், கைது செய்யப்பட்டனர்.

பாட்னா உட்பட, மேலும் மூன்று மாவட்டங்களில் தான், அதிகமான முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து, அங்கு கண்காணிப்பும், சோதனையும், அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அசராமல் புதுவித டெக்னிக்குகளை பயன்படுத்தி ‘பிட்' போட்டு வருகின்றனராம் பெற்றோர்.

இன்னமும் ஏன் இப்படி பிட் போடனும்? எந்திரன் பாணி டெக்னிக் பயன்படுத்தலாமே என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

English summary
Families climb walls to provide answer chits to students of Class 10 Board exams. Vaishali, Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X