For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரு டூ கோயம்புத்தூர் - இனி “டாய்லெட்” வசதியுடன் புதிய பஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கப்படும் என கர்நாடக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மைசூரு வழித்தடத்தில் கூடுதலாக 2 பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதே போல வேறு சில ஊர்களுக்கும் பேருந்து சேவை தொடங்குவது தொடர்பாக கர்நாடக போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரகுமார் விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Flybus service to Coimbatore from KIA soon

அப்போது அவர், "பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து இடையில் எங்கும் நிற்காமல் சரியாக 3 மணி நேரத்தில் மைசூருவை சென்றடைவதால் சர்வதேச பயணிகள் மட்டுமில்லாமல், உள்ளூர் பயணிகளும் பறக்கும் பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர். இதே போல பெங்களூருவில் இருந்து அருகில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.

கழிப்பறை வசதியுடன் கூடிய இந்த பேருந்து பெங்களூருவில் இருந்து 8 மணி நேரத்தில் கோயம்புத்தூரை சென்றடையும். பயண கட்டணமாக ரூபாய் 1,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த சேவை தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

English summary
Buoyed by the success of the Flybus service operated from the Kempegowda International Airport to Mysuru, Karnataka State Road Transport Corporation is now planning to introduce more services in the near future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X