கணவனை காரில் அடைத்துவிட்டு, 8 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த காமக் கொடூரன்கள்
மகாராஷ்டிராவில் கணவனை காரில் அடைத்துவிட்டு 8 மாத கர்ப்பிணியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரில் 3 பேர் கைதாகியுள்ளனர்.
Recommended Video

கோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவனை காரில் அடைத்து பூட்டிவிட்டு 8 மாத கர்ப்பிணி மனைவியை 4 காமக் கொடூரன்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் ஹோட்டலுக்கு வேலையாட்களைத் தேடி பக்கத்து மாவட்டமான சங்லி மாவட்டத்தில் உள்ள துர்சி பாட்டாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

அங்கே ஒருவன் அந்த தம்பதிகளிடம் ஹோட்டலில் வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறியதோடு ஹோட்டலில் வேலை செய்ய மேலும் இரண்டு பேர் ஆர்வமாக இருகிறார்கள் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளான். அங்கே காரில் சென்றதும் அந்த நபர் தம்பதியரைத் தாக்கியுள்ளான். மேலும், கணவனை காரில் வைத்து பூட்டிய பின், அவருடைய 8 மாத கர்ப்பிணி மனைவியை இழுத்துச் சென்று 4 பேர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதிகள் அங்கிருந்த டஸ்கான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர்களைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். ஒருவன் மட்டும் தலைமறைவாக உள்ளான்.
இது குறித்து, டஸ்கான் காவல் நிலைய போலீஸ் அஜய் சிண்ட்கர் கூறுகையில், "பிடிபட்ட 3 இளைஞர்களும் அந்த பெண்ணிற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அந்த 3 பேரும் அந்த பெண்ணின் ஹோட்டலில் ஆறு மாதங்கள் வேலை செய்துள்ளனர். மேலும், அந்த பெண் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு, விசாரணையில், அந்த பெண் சொல்ல தகவல்களையும் பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் உறுதி செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அம்மாநில பெண்கள் ஆணையம் சங்லி மாவட்ட போலீஸ்டம் அறிக்கை கேட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications