மகா காளி அணையில் செஃல்பி... 3 நர்சிங் மாணவிகள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: 'செஃல்பி' மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப் பகுதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்.

Four students drown while clicking selfies in Maharashtra

அப்போது நீர் நிறைந்த அணைப்பகுதியில் கரையின் ஓரமாக நின்று கொண்டு மாணவிகள் 'செஃல்பி' எடுக்க விரும்பினர். இதனையடுத்து மாணவிகள் 3 பேரும் செஃல்பி எடுத்தனர். அதில் திருப்தி அடையாத அவர்கள், தண்ணீரில் இறங்கி 'செஃல்பி' எடுத்தனர்.

அப்போது எதிர்பாராத வகையில் ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன மற்ற 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் துர்திருஷ்டவசமாக 3 பேரும் அணை நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதைப் பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவர், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான். ஆனால் அவரால் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் தத்தளித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனைவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4 students drowned in Mahakali dam near Kharangana village in Wardha district of Maharashtra while clicking selfies.
Please Wait while comments are loading...