ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்து மத்திய அமைச்சரான அனில் மாதவ் தவே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரங்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று கூறி வந்தவர் அனில் மாதவ் தவே. 2009ஆம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அனில் மாதவ் தவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இடம் பெற்றார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர்.

உடல்நலக்குறைவினால் சிகிக்சை பெற்று வந்த போதும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆர்வமுடன் செயல்பட்டவர் அமைச்சர் தவே என்ற தகவல் வெளியாகியுள்ளது.

From RSS to Environment Minister Anil Madhav Dave

கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கூட உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார் அனில் மாதவ் தவே.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான அனில் மாதவ் தவே பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும் பங்காற்றியவர். எம்காம் பட்டதாரியான இவர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மோடி அமைச்சரவையை விரிவாக்கம் செய்த போது, 2016 ஜூலை 5ஆம் தேதியன்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்று 1 ஆண்டு கூட நிறைவடையவில்லை. 60வது வயதில் உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anil Madhav Dave, who had a longtime association with the Rashtriya Swayamsevak Sangh (RSS), was appointed Environment Minister last year.He was a member of various committees in parliament and was also in the Parliamentary Forum on Global Warming and Climate Change.
Please Wait while comments are loading...