கொடுமை.. ஓடும் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு.. 12 வயது சிறுமி படுகாயம்.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்
கண்ணூர்: கண்ணூரில் ஓடும் ரயில் மீது விஷமிகள் கற்களை வீசியதில் 12 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாரபட்சம் இன்றி விரும்புவது ரயில் பயணங்களை தான். அப்படிப்பட்ட சுவாரசியமான ரயில் பயணங்களை சில விஷம எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நாசமாக்கி விடுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை தடம்புரளச் செய்வது; டிராக்குகளை மாற்றும் கருவிகளை உடைப்பது என இவர்கள் செய்யும் அட்டூழியம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற ஒரு பரிதாபமான சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது மனைவி ரஞ்சினி, மகள் கீர்த்தனா (12) ஆகியோருடன் கண்ணூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மங்களூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுமி கீர்த்தனா வெளியே வேடிக்கை பார்ப்பதற்காக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், கண்ணூரின் தாலே சொவ்வா, எடக்காட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்ற போது, திடீரென சிறுமி கீர்த்தனா அலறி துடித்தார். என்னவென்று பார்த்த போது அவரது இடது தலை பகுதியில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
அப்போதுதான், ரயிலின் மீது விஷமிகள் சிலர் கல் வீசியிருப்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரயிலை சங்கிலி பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தினர். பின்னர், ரயில்வே போலீஸார் அங்கு வந்து சிறுமியை தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மங்களூர் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இதுபோன்று ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் 30-ம் தேதி மங்களூரின் உலால் ரயில் நிலையம் அருகே வந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை எச்சரித்து ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications