சிறுவயதில் ஆபாசம் படம்... குழந்தைகள் தின விழாவில் முகம் சுளிக்க வைத்த கோவா பாஜக முதல்வர் பாரிக்கர்

Subscribe to Oneindia Tamil

பனாஜி: சிறு வயதில் தாம் ஆபாச படம் பார்த்ததாக குழந்தைகளிடத்தில் குழந்தைகள் தின விழாவில் பேசி முகம் சுளிக்க வைத்திருக்கிறார் கோவா மாநில ஆளும் பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர்.

கோவா மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மனோகர் பரிக்கர். இவர் மத்தியில் பா.ஜ.க அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து மத்தியமைச்சராக பதவியேற்றார். அடுத்து நடந்த கோவா சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க ஜெயித்த போது, மக்கள் மீண்டும் பரிக்கரே முதல்வராக வேண்டும் என்று விரும்பினர்.

Goa CM Manohar Parikar shared his memory when he was get caught on watching an adult movie

அதனைத் தொடர்ந்து கோவா முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்கள் மத்தியில் பரிக்கருக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளிக்குழந்தைகளுடன் அவர் உரையாடினார். அப்போது அவர்கள் வேடிக்கையாக கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளிதார் பரிக்கர்.

ஒரு கேள்வியில் சிறுவயதில் நீங்கள் ஆபாசப்படம் பார்த்தது உண்டா என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பரிக்கர், நாங்கள் சிறுவயதில் ஆபாசப்படத்தில் பார்த்தைவிட மோசமான காட்சிகள் டி.வி.,களில் வருகிறது என்றார். மேலும், சிறுவயதில் அவரும் அவரது அண்ணனும் ஆபாசப்படம் பார்க்க தியேட்டருக்குச் சென்று மாட்டிக் கொண்ட கதையையும் பகிர்ந்து கொண்டார் பரிக்கர்.

'சிறுவயதில் எனது அண்ணனும், நானும் யாருக்கும் தெரியாமல் தியேட்டரில் ஆபாசப்படம் பார்க்கச் சென்று இருந்தோம். இடைவேளையின் போது விளக்கு போட்டபோது தான் தெரிந்தது. அருகில் எங்கள் உறவினர் அமர்ந்து இருந்தது. உடனே நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம். மாலை வேளைகளில் அந்த உறவினர் எங்கள் வீட்டில் உள்ளோருடன் பேசுவது வழக்கம். எப்படியும் இன்று இந்த விஷயம் தெரிந்துவிடும் என்று தெரிந்து, நாங்கள் ஒரு திட்டமிட்டோம்'.

'வீட்டிற்கு வந்ததும் எனது அம்மாவிடம், நாங்கள் இன்று என்ன படம் என்று தெரியாமல் ஆபாசப்படம் போட்டிருந்த திரையரங்குக்குச் சென்று இருந்தோம். படம் போட்டதும் ஓடிவந்துவிட்டோம். ஆனால், நமது உறவினர் அந்தப்படத்திற்கு வந்திருந்தார் என்று போட்டுக்கொடுத்துவிட்டோம்'.

'படம் முடிந்து மாலை வீட்டிற்கு வந்த உறவினர் நாங்கள் நினைத்தது போலவே எங்களை திரையரங்கில் பார்த்ததைச் சொல்லிவிட்டார். உடனே எங்கள் அம்மா அது தான் தெரியாமல் போய்விட்டார்கள் என்று பாதியில் வந்துவிட்டார்கள். அதுசரி நீங்கள் ஏன் அங்கு போய் இருந்தீர்கள் ? என்று கேட்டதும் அந்த உறவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார். எங்களுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்போதும் அந்த நாள் ஞாபகம் இருக்கிறது' என்று பதில் சொல்லி இருக்கிறார் மனோகர் பரிக்கர். குழந்தைகளிடத்தில் இப்படியான கதைகளையா சொல்வது என இப்போது பாரிக்கர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Goa CM Manohar Parikar shared his memory when he was get caught on watching an adult movie in his childhood.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற