ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து விபத்து...10 பேர் பலி... மற்றவர்களின் கதி?

Subscribe to Oneindia Tamil

கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 10 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல் ஜெகன் மோகன் இழப்பீடாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆந்திர அரசுப் பேருந்து

ஆந்திர அரசுப் பேருந்து

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்காரெட்டிகுடம் தாலுகாவுட்பட்டது ஜல்லர் கிராமம். இந்த கிராமத்தில் வாகனங்கள் ஆற்றைக் கடப்பதற்காக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசுப் பேருந்து ஒன்று நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 47 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வேலேறுபடு என்ற பகுதியில் இருந்து புறப்பட்ட ஜங்காரெட்டிகுடம் வழியே சென்று கொண்டிருந்தது. ஜல்லார் என்ற பகுதியில் ஆற்றைகடப்பதற்காக பேருந்து பாலத்தின் மீது ஏறியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது

பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது

கட்டுப்பாட்டை இழந்ததால் அரசுப் பேருந்து தடுப்புச்சுவற்றில் மோதி அதை உடைத்துக்கொண்டு ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தை பார்த்த கிராம மக்கள் உடனடியாக ஓடிவந்தனர். தங்களாக முடிந்தவரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும் அப்பகுதிக்கு விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 10 பயணிகள் இதுவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் 5 பெண்களும் அடங்குவர். இந்த விபத்தில் இதுவரை 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஜங்காரெட்டிகுடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இழப்பீடு அறிவித்தார் முதல்வர்

இழப்பீடு அறிவித்தார் முதல்வர்

பலியானவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே விபத்து குறித்து கேள்விபட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விபத்து தொடர்பாக இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மருத்துவத்துறை அமைச்சர் இரங்கல்

மருத்துவத்துறை அமைச்சர் இரங்கல்

இந்த சம்பவத்தை கேள்விபட்ட ஆந்திர மாநில துணை முதல்வரும், மருத்துவத்துறை அமைச்சருமான அல்லா நானி அதிர்ச்சி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவி பிறப்பித்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க ஜங்காரெட்டிகுடம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+