For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை: சட்ட திருத்தம் செய்யும் மத்திய அரசு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பாலில் நீரைக் கலப்போருக்கு கடும் தண்டனை வழங்க சட்டதிருத்தம் செய்ய உள்ளது மத்திய அரசு.

Govt to Make Adulteration of Milk Serious Crime

பாலில் நீரைக் கலப்பது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ராஜ்யசபாவில் கூறுகையில்,

உணவில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்ய எனது அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கலப்படம் செய்யப்படும் பாலால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றார்.

English summary
The government will amend the Food Safety and Standards Act to make adulteration of milk and food items a serious crime punishable with a harsh penalty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X