31 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி நேற்றுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்ட நிலையில் அவர் மொத்தம் 31 பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு 1995 முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜக தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது.

குஜராத் முதற்கட்ட தேர்தல்
அதேவேளையில் குஜராத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினரும் தீவிர பிரசாரம் செய்து வரகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதி 19 மாவட்டங்களில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மொத்தம் 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.

2ம் கட்ட தேர்தல் தீவிர பிரசாரம்
இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்த 2ம் கட்ட தேர்தலில் மொத்தம் 833 போட்டிகளில் களத்தில் உள்ள நிலையில் இவர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதற்கான தேர்தல் என்பது வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

இறுதிக்கட்ட பிரசாரம்
2ம் கட்ட தேர்தலையொட்டி நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி திறந்த வாகனத்தில் நேற்று குஜராத்தின் அமதாபாத்தில் 50 கிலோமீட்டர் தூரம் பயணித்து பிரசாரம் செய்தார். நேற்றும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும், ஆம்ஆத்மி சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். தற்போது இறுதிக்கட்ட பிரசாரம் களைகட்டியுள்ளது.

இன்றுடன் முடியும் பிரசாரம்
இந்நிலையில் தான் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் பகிரங்கமாக ஓய்கிறது. இன்று தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுடன் தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். குஜராத் தேர்தலுக்காக அவர் மொத்தம் 31 பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று பிரதமர் மோடி அமதாபாத்தில் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி பங்கேற்ற மிகப்பெரிய வாகன பிரசாரமாக இது அமைந்துள்ளது. குஜராத்தில் 2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications