குஜராத் பாலம் அறுந்தது விபத்தில்ல.. சதி! பின்னணியில் “ஒரு” கட்சி.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பகீர்
காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், இது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதி என்றும் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 141 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது புகழ்பெற்ற தொங்கு பாலம். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பழமையான கேபிள் பாலத்தின் புணரமைப்பு பணிகள் அண்மையில் நடைபெற்றன.
சமீபத்தில் இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக இந்த மோர்பி பாலம் உருவெடுத்தது.

மக்கள் கூட்டம்
அண்மையில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் இந்த பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பாலத்திற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு இருந்தனர்.

அறுந்த பாலம்
235 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் நிற்பதற்கு குறிப்பிட்ட அளவிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான மக்கள் கூட்டம் திரண்டதால் எடை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தால் பாலம் எடை தாங்காமல் அறுந்து விழவே மக்கள் ஆற்றில் விழுந்தனர்.

135 பேர் மரணம்
பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தவர்களில் சிலர் நீச்சல் அடித்து தப்பி வந்துவிட்டனர். ஆனாலும் குழந்தைகள், பெண்கள் உட்பட 135 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிர்ச்சியை இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அக்னி ஹோத்ரி ட்வீட்
இந்த நிலையில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்விட்டரில் விபத்துக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "மோர்பி பால விபத்து என்பது அர்பன் நக்சல்களில் திட்டமிட்ட சதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், ரயில் தண்டவாளங்கள், பாலங்களை தகர்க்கிறார்கள். அர்பன் நக்சல்களுக்கு அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாதுகாப்பு வழங்குகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

காரணம் என்ன?
இவர் இவ்வாறு கூறியுள்ள நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கடிகார நிறுவனத்திடம் இதன் பராமரிப்பு பணிகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக டிக்கெட்டுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமான அளவு பாலத்தில் மக்களை அனுமதித்ததால் எடை தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கைதும் உச்சநீதிமன்ற உத்தரவும்
பாலம் விபத்தை தொடர்ந்து காவல்துறை 9 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரணை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை நவம்பர் 14 ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்து இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications