டெல்லியில் கடும் பனிமூட்டம்.. 59 விமானங்கள் தாமதம்.. 21 ரயில்கள் ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம்-வீடியோ

  டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக 59 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் கடும் குளிரும் நிலவி வருகிறது.

  Heavy fog hits normal life in Delhi

  குளிரின் தாக்கத்தால் மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். காலை 10 மணியை தாண்டியும் பனிமூட்டம் விலகாமல் உள்ளது.

  இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். பனிமூட்டத்தால் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் 59 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 13 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  கடும் குளிரால் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் குளிர் காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Heavy fog hits normal life in Delhi. Flight and rail service affected due to heavy fog in Delhi. 59 flights delayed and 21 rails canceled.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X