For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை

தேர்தல் நாட்களை ஒரு நாள் குறைத்தாலும், அதன்மூலம் பொது சுகாதாரத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 தொகுதிகள் உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 8 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. ஏப்ரல் 1, 6, 10, 17 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஏப்ரல் 22 ஆம் தேதி 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொல்கத்தா தேர்தல் பிரசாரத்தை மாநில முதல்வர் மமதா பானர்ஜி ரத்து செய்தார்.

தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.. ஆனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டுமா? டெல்லி நீதிமன்றம்தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.. ஆனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டுமா? டெல்லி நீதிமன்றம்

ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாம்

ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாம்

மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவினை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தர் தினாஜ்பூரில் உள்ள சாகுலியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

2 நாட்களில் நடத்தலாம்

2 நாட்களில் நடத்தலாம்

மீதி உள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். ஒரே நாளில் நடத்த முடியாவிட்டால் 2 நாட்களில் நடத்துங்கள். அதன்மூலம் ஒரு நாளை மிச்சப்படுத்தலாம் என்றார்.

நெரிசலான இடத்தில் கூட்டம் நடத்த மாட்டோம்

நெரிசலான இடத்தில் கூட்டம் நடத்த மாட்டோம்

பாஜக என்ன சொல்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்காதீர்கள். தேர்தல் நாட்களை ஒரு நாள் குறைத்தாலும், அதன்மூலம் பொது சுகாதாரத்தை நீங்கள் பாதுகாக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் கூறினார். நானும், எனது கட்சி தலைவர்களும் நெரிசலான இடங்களில் கூட்டம் நடத்த மாட்டோம்.

மோடி எதுவும் செய்யவில்லை

மோடி எதுவும் செய்யவில்லை


தடுப்பூசி பற்றாக்குறையை தவிா்க்க பிரதமர் மோடி கடந்த 6 மாதங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சாடிய மமதா, பாஜக என்றாலே கலவரக்காரர்கள் கட்சி என்று அர்த்தம். அவர்கள் மேற்கு வங்காளத்தை குஜராத்தாக ஆக்க அனுமதிக்காதீர்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee has reiterated her demand to the Election Commission to hold three phase elections on the same day due to increasing corona spread in the state. Mamata Banerjee said that even if the election days are reduced by one day, remember that you are thereby protecting public health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X