மழை வந்தால் வெள்ளம் வருவது இயற்கை... இதைச் சொன்னது யார் தெரியமா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கைதானே என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையை பொருத்தவரை மழை நீர் வடிய வடிகால்கள் இல்லாத நிலையாலும், ஆக்கிரமிப்புகளாலும் மழை நீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

If rain occurs flood happens is natural one, says Sarathkumar

இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழையின் ஆரம்ப காலம் என்று கூறுவதால் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனிடையே மனைவி ராதிகா, மகன் ராகுல் உள்ளிட்டகுடும்பத்தினருடன் நடிகர் சரத்குமார் திருப்பதி சென்றுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மழை வந்தால் வெள்ளம் வருவது இயற்கையான ஒன்று என்றார் சரத்குமார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor cum Ex MLA Sarathkumar says that flood is natural one when rain occurs. People should cooperate with TN government for its action.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற