For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நாங்க 44 எம்.பி.க்கள்தான். ஆனால் பாண்டவர்கள் மாதிரி, 100 கெளரவர்களால் மிரட்ட முடியாது"

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸுக்கு 44 எம்.பி.க்கள்தான் ..ஆனால் நாங்கள் பாண்டவர்கள் மாதிரி.. 100 கெளரவர்கள் இணைந்து மிரட்ட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் நடந்தது. தீர்மானத்தை முக்தர் அப்பாஸ் நக்வி முன்மொழிந்து, ராஜிவ் பிரதாப் ரூடி பேசினார்.

‘In House’ Mahabharata: Congress calls its MPs Pandavas, says not scared of BJP’s Kauravas

மாநிலக் கட்சியான காங்கிரஸ்

ராஜிப் பிரதாப் ரூடி பேசுகையில், பாரதிய ஜனதா தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. எங்கள் பிரதமர் பரந்த மனபான்மை கொண்டவர். தேர்தலிலே படுதோல்வி அடைந்த காங்கிரஸ் வெறும் 44 சீட்களை மட்டுமே பெற்றது.

மோசமான தோல்வியை அடைந்துள்ள காங்கிரஸ் பிராந்திய கட்சிகள் அளவுக்கு சுருங்கிவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறகூட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை. ஆனால் நாங்கள் அனைத்து கட்சி எம்.பிக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம் என்றார்.

பாண்டவர்கள் நாங்க...

இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.பி.க்கள் மட்டும் இருக்கலாம். ஆனால் பாண்டவர்களை, 100 கெளவர்களால் மிரட்ட முடியாது என்று பதிலடி கொடுத்தார்.

English summary
Congress tore into the agenda outlined by President Pranab Mukherjee in his address saying it is repackaging of work done by UPA and asked the Narendra Modi government to implement the promises made without trumpeting and "arrogance".Congress, which has been reduced to 44 members in the Lok Sabha, told the government it will keep on the pressure to ensure implementation of people-oriented programmes irrespective of the small number of members it has in the House. In this context, Leader of the Congress in the Lok Sabha Mallikarjun Kharge invoked Mahabharta and said though Pandavas were few in number as compared to Kauravas, still they could not be defeated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X