கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்கள் மோசமான தோல்வி- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகாவில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் வாங்கியுள்ள ஓட்டுக்கள் படுமோசமாக உள்ளது.

  கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிட்டது. பெங்களூரிலுள்ள காந்திநகர், கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது அதிமுக.

  In Karnataka AIADMK battle goes in vain

  ஆனால், அதிமுக வேட்பாளர்கள் மோசமான வாக்குகளையே பெற்றுள்ளனர்.

  காந்திநகரில் போட்டியிட்ட யுவராஜ், மதியம், 12.30 மணி நிலவரப்படி 435 வாக்குகளை பெற்றிருந்தார். அத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ், 29970 வாக்குகளை பெற்று முதலிடத்திலும், மஜதவை சேர்ந்த நாராயணசாமி 2வது இடத்திலும் உள்ளனர்.

  ஹனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஷ்ணுகுமார், வெறும் 135 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். பல்வேறு சுயேச்சைகள் இவரை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். நோட்டா 668 வாக்குகளை பெற்றிருந்தது.

  தங்கவயல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பு, 666 வாக்குகளை பெற்றுள்ளார். தமிழர்கள் 70 சதவீதம் உள்ள இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரூபகலா 37993 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Karnataka AIADMK battle goes in vain as none of the constituency people support them.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற