யாருக்கு தீயணைப்பு பயிற்சி கொடுத்துள்ளார்கள் தெரியுமா..? சர்ச்சையில் கேரள தீயணைப்பு படையினர்
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளித்து தீயணைப்பு படையினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் சில நாட்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுடன் தீயணைப்பு படையினர் இருக்கும் படங்கள் இணையதளங்களில் பரவின.

பாஜக கண்டனம்
மேலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பினருக்கு தீயணைப்பு படை அதிகாரிகள் பயிற்சி அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன இதற்கு பாஜகவின் மாநில தலைவர் கே சுரேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பினராயி விஜயனை விமர்சனம் செய்துள்ளார்.

சிவப்பு கம்பள வரவேற்பு
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ள அமைப்பினருக்கு கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பயிற்சி அளித்துள்ளனர். ஜிகாதி சக்திகளை பினராயி விஜயன் அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ‛டேக்' செய்துள்ளார்.

நடவடிக்கைக்கு பரிந்துரை
இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தீயணைப்பு படை டிஜிபி சந்தியாவுக்கு கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‛‛சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினோம். கோழிக்கோட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கலாசார விழாவுக்கு சென்றபோது தீ தடுப்பு நடவடிக்கை குறித்து விதிகளை மீறி பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார். இதனால் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.

போலீஸ்காரர் டிஸ்மிஸ்
முன்னதாக கடந்த மாதம் இடுக்கி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 150 பேரின் விவரங்களை எஸ்டிபிஐ அமைப்பின் தலைவர்களுக்கு வழங்கியதாக கரிமானூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் பிகே அனாஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications