For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் அமையும் இந்தியாவின் முதல் ரயில்வே ஆட்டோ-ஹப்! கார் ஆலைகளுக்கு உதவும்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் முதல் ரயில்வே ஆட்டோ ஹப் சென்னையில் அமையும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

தற்போது 2 சதவீதம் அளவில் சரக்கு ரயில் மூலமாக, கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த சரக்கு போக்குவரத்தை 15 சதவீதம் அளவுக்கு உயர்த்த ஆட்டோ ஹப்புகள் உதவும்.

India’s first rail auto hub will come up in Chennai

ரயில் பாதை அருகே ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படும். அங்கு தயாராகும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்திற்கு அதிகம் செலவழிக்க வேண்டி வராது.

மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஷாலிமாரில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவர முயற்சி எடுத்தார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. சென்னையில் ரயில் ஆட்டோஹப் அமைய உள்ளதால் அங்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

English summary
Auto companies to benefit as India's first rail auto hub will come up in Chennai that will reduce logistics cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X