For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீறிய ஏவுகணை.. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி 5யை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த இந்தியா-மிரளும் சீனா

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை.

Recommended Video

    DRDO Happy News | Agni 5 Missile Test | Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லை பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. சீனா புதிய எல்லை விதிகளை கொண்டு வந்து இந்தியாவை சீண்ட தொடங்கி உள்ளது. லடாக் தொடங்கி பீகார் வரை பல்வேறு பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து இந்தியாவை சீண்டி உள்ளது.

    இந்த நிலையில்தான் சீனாவிற்கு எச்சரிக்கை மெசேஜ் விடுக்கும் விதமாக இந்தியா அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா இப்போது மேற்கொண்டுள்ளது.

    ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்! ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்!

    ஒடிசா

    ஒடிசா

    அதன்படி Intercontinental Ballistic Missile என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க கூடிய ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஒடிசாவில் சோதனை செய்துள்ளது. ஒடிசா அருகே கடல் பகுதியில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. நேற்று இரவு 7.50 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

    துல்லியம்

    துல்லியம்

    இந்த ஏவுகணை வெற்றிகரமாக சென்று இலக்கை தாக்கியது. துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையில் 3 கட்ட திட எரிபொருள் எஞ்சின்கள் உள்ளது. இந்தியாவின் மற்ற ஏவுகணைகளை விட இது அதிகம் துல்லியம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது 17 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்டது.அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் கொண்டது.

    அக்னி 5

    அக்னி 5

    நிலப்பரப்பில் இருந்து மட்டுமின்றி கடலில் கப்பலில் இருந்தும் இந்த அக்னி 5 ராக்கெட்டை ஏவ முடியும். ஆனால் கப்பலில் இருந்து ஏவும் இந்த சோதனை இன்னும் அக்னி 5 ராக்கெட்டிற்கு முழுமையாக செய்யப்படவில்லை. இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணை ஆகும்.

    அக்னி 6

    அக்னி 6

    அக்னி 6 இப்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது. 5000 கிமீ வரை சென்று இந்த அக்னி 5 ஏவுகணை தாக்கும். ஆனால் இதன் உண்மையான தாக்குதல் தூரம் இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி 4 ஏவுகணைகள் வரை அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் இந்தியாவிடம் இல்லை.

    சீனா

    சீனா

    முக்கியமாக சீனாவின் கிழக்கு பகுதிகளை தாக்கும் திறன் இந்தியாவிடம் இல்லை. ஆனால் தற்போது இருக்கும் அக்னி 5 ஏவுகணை மூலம் சீனாவின் எந்த எல்லை பகுதியையும், எந்த நகரத்தையும் தாக்க முடியும். இதன் 8ம் கட்ட சோதனை இப்போது செய்யப்பட்டுள்ளதால் சீனா கொஞ்சம் கலக்கத்தில் உள்ளது.

    English summary
    India successfully tests Agni 5 missile test amid tussle with China in border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X