For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அளவில் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு 3வது இடம், கொலையில் 2வது இடம்: ஐ.நா. அறிக்கை

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 2010ம் ஆண்டில் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொலை சம்பவங்களை பொறுத்தவரை இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாள்தோறும் செய்தித்தாள்களை பார்த்தால் இளம்பெண் பலாத்காரம், சிறுமி பலாத்காரம் ஏன் 80 வயது மூதாட்டி கூட பலாத்காரம் என்று செய்திகள் வருகின்றன. இந்நிலையில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

அதன் விவரத்தை பார்ப்போம்,

அமெரிக்கா

அமெரிக்கா

கடந்த 2010ம் ஆண்டு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக 85 ஆயிரத்து 593 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து பிரேசிலில் 41 ஆயிரத்து 180 பேர் பாலியல் பலாத்காரங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா

இந்தியா

2010ம் ஆண்டில் அதிக பலாத்காரங்கள் நடந்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த ஆண்டு இந்தியாவில் 22 ஆயிரத்து 172 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

இங்கிலாந்து

இங்கிலாந்து

2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் 15 ஆயிரத்து 892 பேரும், மெக்சிகோவில் 14 ஆயிரத்து 993 பேரும், பிரான்சில் 10 ஆயிரத்து 108 பேரும், ஜெர்மனியில் 7 ஆயிரத்து 724 பேரும், ஸ்வீடனில் 5 ஆயிரத்து 960 பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

கொலை

கொலை

2012ம் ஆண்டில் பிரேசிலில் தான் அதிகபட்சமாக 50 ஆயிரத்து 108 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் 43 ஆயிரத்து 335 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியா

நைஜீரியா

நைஜீரியாவில் 33 ஆயிரத்து 817 பேரும், மெக்சிகோவில் 26 ஆயிரத்து 37 பேரும், காங்கோவில் 18 ஆயிரத்து 586 பேரும், தென்னாப்பிரிக்காவில் 16 ஆயிரத்து 259 பேரும், கொலம்பியாவில் 14 ஆயிரத்து 670 பேரும், பாகிஸ்தானில் 13 ஆயிரத்து 846 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

English summary
India figures third among top 10 countries where highest number of rape have taken place in 2010 while in cases of murder, the country comes second in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X