For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்நாட்டில் தயாரான அதிநவீன ரயில்... அறிமுகம் செய்த இந்திய ரயில்வே

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் இந்த ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

முதல் செட் ரயில் 16 சேர் கார் வகை கோச்சாக இருக்கும். எக்ஸ்க்யூடிவ் மற்றும் நான்-எக்ஸ்க்யூட்டிவ் வகை வசதிகளுடன் ரயில் பெட்டி இருக்கும். 2 எக்ஸ்க்யூடிவ் கார்களும் 14 நான்-எக்ஸ்க்யூடிவ் கோச்சுகளும் இதில் இருக்கும்.

Indian Railways enters new league

இந்த கோச்சுகள் அதிகபட்சமாக 160 கி.மீ வேகத்திலும் இயக்கப்பட கூடியவை. எக்ஸ்க்யூடிவ் கோச்சுகளில் 56 பயணிகளும், நான்-எக்ஸ்க்யூடிவ் கோச்களில் 78 பயணிகள் அமர முடியும்.

ட்ரைய்ன் 18 என்று பெயரிடப்பட்ட இந்த ரயில், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டது. முழுக்க ஏசி வசதி செய்யப்பட்ட இந்த ரயில் அதிகபட்சம் 180 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது.

ட்ரைய்ன் 18 ஆட்டோமேட்டிக் கதவுகளை கொண்டது. ரப்பர் மீது ரப்பர் ப்ளோர், எல்இடி லைட்டுகள் கொண்டது. பயோ-வேக்வம் டாய்லெட் வசதியும் உள்ளது. இன்ஜின் இல்லாத இந்த ரயில், அதிவேக பிக்அப் மற்றும் பிரேக் வசதி கொண்டது என்பதால், பயண நேரம் மிச்சமாகும்.

முக்கிய நகரங்கள் நடுவே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

English summary
Indian Railways set for a giant technology leap! Engine-less trains till now have been limited to metro networks and suburban travel in India, but come June 2018, Indian Railways is all set to roll out its first self-propelled semi-high speed train set for inter-city travel!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X