ஆசிட் வீச்சு: லட்சுமிக்கு துணிச்சலுக்கான சர்வதேச விருது
டெல்லி: துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமியின் பெயரை இந்த விருதுக்காக அமெரிக்கா தேர்வு செய்துள்ளது.
2007ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது இது மட்டுமே.
லட்சுமியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், பிஜி, ஜியார்ஜியா, சவூதி அரேபியா, கவுதமாலா, உக்ரைன், மாலி, தஜிகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விருதை அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் மாகாண செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிட் வீச்சில் சிதைந்த லட்சுமி
கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் டெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் லட்சுமியின் களையான முகம் விகாரமானது.

முகத்தை மறைக்காத லட்சுமி
பொதுவாக ஆசிட் தாக்குதலில் பாதிக்கபட்டவர்கள் தங்களது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவதில்லை. அவர்கள் பொது இடங்களுக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது முகத்தை மறைத்தே செல்கின்றனர். ஆனால் லட்சுமி அப்படி மறைக்கவில்லை.

ஆசிட் விற்பனைக்கு எதிரான இயக்கம்
ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

பெண்களுக்கு மறுவாழ்வாழ்வு
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கான இழப்பீடு குறித்தும் ஆசிட் தாக்குதலை தடுப்பது பற்றியும் அவரே முன்னின்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

சர்வதேச விருது
இதையடுத்து ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், லோக்சபாவில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக லட்சுமிக்கு துணிச்சலுக்கான சர்வதேச விருது வழங்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நிர்பயாவிற்கு விருது
சென்ற ஆண்டுக்கான துணிச்சல் விருது, டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications