For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலியோ தடுப்பு: அடுத்த ஆண்டுமுதல் சொட்டு மருந்துக்கு பதில் தடுப்பூசி-மத்திய அமைச்சர் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: போலியோ சொட்டு மருந்தை தடுப்பூசி வடிவில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அமைச்சர் பேசுகையில் "போலியோவை வேரறுக்க குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றும் திட்டத்தை இந்தியா சிறப்பாக செயல்படுத்தியது. இதன் விளைவாக போலியோ இல்லாத நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

Injectable polio vaccine to be part of immunisation programme

வருங்காலங்களில், சொட்டு மருந்துக்கு பதிலாக ஊசி மருந்து மூலமாக போலியோ எதிர்ப்பு மருந்தை உடலுக்குள் செலுத்த திட்டமிட்டுள்ளோம். நாட்டிலுள்ள 8 மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற ஊசி மருந்து முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் மேலும் 11 மாநிலங்களும், அடுத்தாண்டு ஏப்ரலில் எஞ்சிய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஊசி முறைக்கு மாறும்" என்று தெரிவித்தார்.

English summary
Injectable inactivated polio vaccine (IPV) will soon become part of immunisation programme in India, Health Minister Harsh Vardhan today said. Also the introduction of pentavalent vaccine, which offers protection against five disease, under the immunisation programme will be completed across the country by April next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X