For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பட்ஜெட்:பாமர மக்களுக்கு சாதகமானதாக தருவாரா ப. சிதம்பரம்?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் 2014-15ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் எவற்றையெல்லாம் தனது பட்ஜெட்டில் தெரிவிப்பார் என்று சில யூகங்கள் நிலவுகின்றன.

மத்திய பட்ஜெட்டில் எதிர் பார்க்கப்படும் சில முக்கிய அம்சங்கள்:

p Chidambaram

1.சிதம்பரத்தின் கடந்த ஆண்டு பட்ஜெட் ஆவணங்கள் 30பக்கங்களை கொண்டிருந்தது.ஆனால்,இந்த இடைக்கால பட்ஜெட் 12ல் இருந்து 18 பக்கங்களையே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. காரணம் இது இடைக்கால பட்ஜெட் என்பதால்.

2.வருமான வரி, சுங்க வரி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் இடம் பெறாவிட்டாலும்,அவற்றை பற்றிய வரி சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாம்.

3.உற்பத்தி தொழில்களை பொருத்த வரையில் அதற்கான அதிகபட்ச வரிகளை நீக்கலாம் என கூறப்படுகிறது. மேலும்,உழவர்கள்,ஏற்றுமதியாளர்களுக்கான வங்கி கடனுக்கான வட்டிவிகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

4. சேவை வரிகளும் குறைக்கப் படலாம் என கூறப்படுகிரது.

5.சுகாதாரம் மற்றும் அதற்கான கட்டமைப்புகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.

6.தங்க இறக்குமதிக்கான தணிக்கை மற்றும் வரிகள் நீக்கப்படலாம் எனவும் கருதப்படுகிறது.

7.மத்திய ஆட்சியின் பத்து வருட சாதனைகளை பற்றியும் அவர் பேசுவார் என எதிர் பார்க்கப் படுகிறது.

8.எண்ணை உற்பத்தி,உரம் போன்றவற்றிற்கான நிதி அளவு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

9.மேலும்,கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில்,மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Finance Minister P Chidambaram will present an interim budget for the coming fiscal year on Monday. He will also seek Parliament's approval for expenditure through vote-on-account, which will allow the government to cover its expenditure beyond the current fiscal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X