For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் அதிரடி ஐடி ரெய்டு.. புதிய ரூபாய் நோட்டு ரூ.4 கோடி சிக்கியது .. நகைகளும் பறிமுதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது, இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்புள்ள புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் சிக்கியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 7.5 கிலோ கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரில் நேற்றும் இன்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்றது. முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் வீட்டிலும்கூட ரெய்டு நடந்தது.

IT dept seizes over Rs 4 cr in new currency notes in Bengaluru

இந்த நிலையில், ரெய்டின்போது இரு நபர்களிடமிருந்து மொத்தம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை பி.டி.ஐ செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சோதனையின் போது 7 கிலோ கிராம் தங்கம் மற்றும் 7.5 கிலோ கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் யாரிடமிருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவலை இதுவரை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. ஐடி அதிகாரிகளும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் ஓரிரெண்டு புதிய நோட்டுக்களை கூட வாங்க முடியாமல் கியூவில் நிற்கும்போது, இவ்வளவு கோடிக்கு புதிய ரூபாய் நோட்டு எப்படி இரு நபர்களிடம் பிடிபட்டது என்பது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

புதிய ரூபாய் நோட்டையும் கருப்பு பணமாக பதுக்க, பண முதலைகள் முயல்கிறார்களா என்ற சந்தேகம் இதனால் ஏற்பட்டுள்ளது.

English summary
IT dept seizes over Rs 4 cr in new currency notes after searches in premises of two individuals in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X