காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள வானி ஹமா கிராமப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

J-K: 3 terrorists killed in encounter with security forces in Anantnag

இதனையடுத்து, நேற்று மாலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

Pakistan violates ceasefire along LOC in Jammu

இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. முடிவில் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அப்பகுதியில் தீவிரவாதிகள் வேறு யாரும் பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three militants were gunned down in a brief encounter in Bulbul Nowgam area of Anantnag district late Monday.
Please Wait while comments are loading...