For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வழக்கில் அப்பீல் மனு தாக்கல் எப்போது?: ஆச்சாரியா பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் எப்போது மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பி.வி.ஆச்சாரியா, ஆங்கில பத்திரிகையொன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் ஆச்சாரியா கூறியுள்ளதாவது:

பெரிய வழக்கு

பெரிய வழக்கு

வழக்கமாக, அப்பீல் மனுக்கள் மீது சட்டத்துறை செயலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த வழக்கு, ஒரு மாநில முதல்வருக்கு எதிரானது என்பதால், கர்நாடக முதல்வர், ஒட்டுமொத்த அமைச்சரவை சம்மதத்துடன் இம்முடிவை எடுத்துள்ளார். இந்த கூட்டு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடந்துள்ளது.

காங்கிரசில் கருத்து வேறுபாடு

காங்கிரசில் கருத்து வேறுபாடு

காங்கிரசில் ஒரு கோஷ்டி, மேல்முறையீடு வேண்டாம் என்று கூறிவந்தாலும், மற்றொரு கோஷ்டி மேல்முறையீட்டுக்கு ஆர்வம் காண்பித்தது. எனக்கே காங்கிரசிலிருந்து சிலர் கடிதம் எழுதி, உங்கள் முயற்சி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இறுதியில் சட்டப்படியே மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் தீர்ப்பில் தவறுகள்

ஹைகோர்ட் தீர்ப்பில் தவறுகள்

ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள ஏகப்பட்ட தவறுகளை அடிப்படையாக வைத்து, மேல்முறையீட்டின்போது வாதம் செய்யப்படும். அக்னிகோத்ரி வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதத்துக்கு குறைவாக சொத்து இருந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால், அது ஒன்றும் கணக்கீடு அல்லது அறிவியல் பார்முலா கிடையாது. எல்லாவற்றிலும் அதை அப்ளை செய்யவும் முடியாது.

900 கோடி குவித்தால் விட்டுவிடலாமா?

900 கோடி குவித்தால் விட்டுவிடலாமா?

உதாரணத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வைத்துள்ள ஒருவர், 900 கோடிகளை வருவாய்க்கு அதிகமாக சேர்த்தாலும், அது 10 சதவீதத்துக்கு குறைவாகத்தான் வருகிறது. இதற்காக 900 கோடி ரூபாயை சுருட்டியவரை விடுதலை செய்துவிட முடியுமா? 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான வித்தியாசமாக இருந்தால், பரவாயில்லை என்று சொல்லலாம். இதையெல்லாம், உச்சநீதிமன்றத்தில் எடுத்து வாதிடுவோம்.

ஹைகோர்ட்டில் 4 மாதங்கள்தான்

ஹைகோர்ட்டில் 4 மாதங்கள்தான்

மேல்முறையீடு எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாது. 18 வருடங்களாக நடந்த வழக்கு, ஹைகோர்ட்டில் நான்கே மாதங்களில் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் எப்படி நடைபெறும் என்று தெரியாது. ஆனால், ஊழல் தடுப்பு சட்டப்படி, இதுபோன்ற வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஜூலையில் தாக்கல்

ஜூலையில் தாக்கல்

தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறை நடைமுறையில் உள்ளது. எனவே அவசர வழக்குகளை மட்டுமே உடனடியாக விசாரணைக்கு எடுப்பர். இவ்வழக்கு அவசர வழக்காக கருதப்பட முடியாது என்பதால், விடுமுறை கால பெஞ்சில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது என்று கருதுகிறேன். எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.

English summary
"It may take one or two weeks to prepare a SLP. Also, the vacation bench may not entertain our petition now, as it may not consider the matter urgent. Most likely we will file it after July 1" SPP Acharya says in an interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X