2ஜி ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது சரிதான்: சு.சாமி கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தது. ஆனால் தீர்ப்பை தயாரிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் தேவை என்பதால் டிசம்பர் 5ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று அறிவித்தார்.

Judge needs more time in 2G case, no harm in that: Subramaniyan Swamy

இதனிடையே சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று வருகை தந்திருந்த சு.சாமி, பின்னர் டிவிட்டரில் இதுகுறித்து கூறுகையில், நீதிபதி கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளார். இதனால் தீங்கு ஒன்றும் இல்லை. இது சாதாரண வழக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள் என்பதால் தீர்ப்பு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், தீர்ப்பு எப்படி வந்தாலும், இரண்டில் ஒரு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தே தீரும் என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"In 2G court today.Judge needs more time. No harm in that. It is not an ordinary case and the judgment should be good enough for SC in appeal" says Subramaniyan Swamy.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற