ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்,58 பேர் காயமடைந்தனர்.

Judge who gave verdict in Hyderabad Mecca bomb blast

இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தீர்ப்பு இன்று என்ஐஏ நீதிமன்றம் வழங்கியது.

Judge who gave verdict in Hyderabad Mecca bomb blast

தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக காரணம் கூறி ஆந்திர தலைமை நீதிபதிக்கு கடிதத்தை இன்று சமர்ப்பித்தார். இத்துடன் 15 நாட்கள் விடுமுறை கோரியும் அவர் கடிதம் அளித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Judge Ravinder Reddy resigns after he delivers the verdict Mecca Masjid blast case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற